ரயனுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியபீட மாணவ செயற்குழு ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றில் அவர் இன்றைய தினம்(23) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் ஏ.ஏ.ஆர்.ஹயியன்துடுவ ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், கல்வி நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் பிணை இரத்துச் செய்யப்படும் எனவும் நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தின் போது சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு