சபாரி ஜீப் உரிமையாளர்கள் போராட்டம்

யால தேசிய சரணாலயத்தில் நாளாந்தம் பிரவேசிக்கக் கூடிய வாகனங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சபாரி ஜீப் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் குழு இணைந்து இன்று போராட்ட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை யால சரணாலயம் சில காரணங்களுக்காக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், குறித்த தினத்திற்கு முன்னர், இன்றையதினம் (23) சரணாலயத்தை திறக்க வன ஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்தது.

இந்நிலையில், சபாரி ஜீப் உரிமையாளர்களின் இந்தப் போராட்டம் காரணமாக, தனிப்பட்ட வாகனங்களில் வருவோர் தவிர்த்து, ஏனைய சுற்றுலாப் பயணிகள் சரணாலயத்திற்குள் நுழைய முடியாதுள்ளதாக குறித்த சரணாலயத்தின் பொறுப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யால சரணாயலத்தில் நாளாந்தம் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றமையால், வன ஜீவராசிகள் திணைக்களம் இதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்தமையால், யால வலயத்தின் முதலாம் இலக்கப் பகுதியில் நாளாந்தம் ஒரு தடவைகள் 100 வாகனங்கள் பிரவேசிக்க முடியும் எனவும், இதற்கமைய, காலை, பகல் மற்றும் இரவு என மூன்று வேளைகளும் 300 வாகனங்கள் சரணாலயத்திற்குள் பிரவேசிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதுஎவ்வாறு இருப்பினும், பாடசாலை மாணவர்கள் மற்றும் தூர இடங்களில் இருந்து வரும் தேசிய சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அப்பால் சரணாலயத்திற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பிரதிப் திட்டமிடல் பணிப்பாளர் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு