02 லட்சம் மெட்ரிக் டொன் அரிசி இறக்குமதி

வெளிநாடுகளிலிருந்து 02 லட்சம் மெட்ரிக் டொன் அரிசி வகைகளை உடனடியாக இறக்குமதி செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு சர்வதேச ரீதியாக கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், இந்தியா, பாகிஸ்தான், மியன்மார், கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், நாட்டரிசி 90 ஆயிரம் மெட்ரிக் டொன், சம்பா அரிசி 60 ஆயிரம் மெட்ரிக் டொன், வெள்ளை பச்சையரிசி 50 மெட்ரிக் டொன் ஆகியவற்றை இறக்குமதி செய்ய கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விலைகள் பெற்றுக்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட விநியோகத்தர்கள்களிடம் இறக்குமதி செய்யப்படும் முதல் தொகை அரிசி ஒரு லட்சம் மெட்ரிக் டொன் எதிர்வரும் 30ஆம் திகதி இறக்குமதி செய்யப்படும் எனவும், எஞ்சிய ஒரு லட்சம் மெட்ரிக் டொன் அரிசி டிசம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை அடையும் எனவும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்ததுடன், சந்தை கேள்விக்கு அமைய அரிசியை விநியோகிக்க வாணிபத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு