103 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

உஸ்மான் கானின் அபாரமான பந்துவீச்சிற்கு முகங்கொடுக்க முடியாமல் இலங்கை 103 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் ஜந்தாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 104 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சார்ஜா மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் துடுப்பெடுத்தாட தீர்மானித்த நிலையில், இலங்கை அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளும் 08 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

தினேஷ் சந்திமால் ஓட்டமின்றி ஆட்டமிழக்க, அணித்தலைவர் உபுல் தரங்க 08 ஓட்டங்களுடன் வெளியேறியதுடன், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிரோஷன் திக்வெல்ல ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடிய திஸ்ஸர பெரேரா 25 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்ற அதேவேளை, இலங்கை அணியின் 08 துடுப்பாட்ட வீரர்களும் 10ற்கும் குறைவான ஓட்டங்களோடு ஆட்டமிழந்த நிலையில், இலங்கை அணி 26.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது.

தனது இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் உஸ்மான் கான் 34 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

05 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 4-0 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு