3D பாலம் நெதர்லாந்தில் திறந்து வைப்பு (Photos)

நெதர்லாந்தில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் ஒன்று உருவாக்கப்பட்டு, ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறையப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. எந்திரக் கைகள், மருத்துவப் பயன்பாடுகளுக்கான உபகரணங்கள் போன்றவை தயாரிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது நெதர்லாந்தில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 08 மீட்டர் ஆகும். இது 800 அடுக்குகளான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 40 லொறிகளை ஒரேநேரத்தில் தாங்கும் அளவு வலிமை வாய்ந்தது. கொங்கிரீட் பாலத்தைப் போலவே இதன் வாழ்நாள் அதிகம். இந்த பாலத்தை உருவாக்க 03 மாதங்கள் பிடித்துள்ளது.

சாதாரண பாலத்தை உருவாக்கும் செலவில் பாதிதான் இதற்கு செலவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு