டெங்குத் தாக்கம் அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் 1,070 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் ஒருநாளில் 9,000 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 85 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும், தற்போது சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலைக் காரணமாக டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக டொக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலேயே டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக அதேவேளை, புத்தளம், குருநாகல் ஆகிய பகுதிகளிலும் டெங்கு நுளம்புகள் பரவும் வீதம் ஓரளவு அதிகரித்துள்ளது.

மழை காரணமாக நீர் தேங்கும் பகுதிகளைத் தொடர்ந்தும் சுத்தப்படுத்துதல் வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு