கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் இயக்கச்சி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை வெற்றிலைக்கேணி பகுதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கஞ்சா பொதியுடன் திருகோணமலைக்கு செல்லவிருந்த நிலையிலேயே, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்;த 4.70 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள பெண் 32 வயதுடையவர் எனவும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு