மாகாண சபைகள் அரசாங்கத்தின் கீழ் செயற்படுவதே சிறந்தது

புதிய அரசியல் யாப்பின் ஊடாக அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளும் போது, மாகாண சபைகள் அரசாங்கத்தின் கீழ் செயற்படும் வகையிலேயே ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபத் தலைவரும், அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியல் யாப்பு இன்னும் தயாரிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னர் அது குறித்து பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பியும் கோரி வருகின்ற போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது, நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்விற்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பில்லை என்ற போதிலும், இதன் ஊடாக மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டாலும், அவை மத்திய அரசாங்கத்தின் கீழ் செயற்படும் வகையிலேயே அமைய வேண்டும் எனவும், ஒற்றையாட்சி முறைமையும், பௌத்தத்துக்கான முன்னுரிமையும் தற்போது இருப்பதைப் போன்றே தொடர வேண்டும் என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு