யாழில் கவனயீர்ப்பு (Photos)

நல்லாட்சி அரசே வாக்குறுதி என்னாச்சு, உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே போன்ற கோஷங்களை எழுப்பியவாறு உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதிய ஜனநாயக மாக்சிஷ லெனினிஷ கட்சியும், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் இணைந்து யாழ் மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்று (24) காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே, அவர்களின் வழக்குகளை அநுராதபுரம்தில் இருந்து வவுனியாவிற்கு மாற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தினை தடை செய், வாய்ப் பேச்சில் நல்லிணக்கம் விதைப்பது அரசியல் கைதிகளையா? போன்ற கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு