உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து செயற்பட வாய்ப்பு

அடுத்து வரவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு, ஜனாதிபதியுடன் கலந்துரையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளதுடன், எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் புதிய அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் டிலான் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படத் தயாராக இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு