ஐ.தே.க மேல்மாகாண உறுப்பினரின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரன்டீர் ரோத்ரிகோவின் வீட்டில் இருந்து, ரவைகள் மற்றும் குண்டு துளைக்காத கவச சட்டை உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கமைய, பல்வேறு வகையான ரவைகள் 115 இவ்வாறு மீட்கப்பட்டுள்ள நிலையில், ரன்டீர் ரோத்ரிகோவின் மனைவியை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று பகல் திவுலப்பிட்டி பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் குழுவொன்றுக்கும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ரன்டீர் ரோத்ரிகோ உள்ளிட்ட ஏழ்வர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு