மிருக பலிக்குத் தடை

இந்து ஆலயங்களில் மிருக பலி இடுவதற்கு யாழ்;. மேல் நீதிமன்றம் இன்று (24) தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்று வழக்கு விசாணை எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்து ஆலயமான கவுணாவத்தை நரசிம்மர் ஆலய வேள்வியின் போது ஆடுகள், கோழிகள் என்பனவற்றை வெட்டி பூசை வழிபாடுகளில் ஈடுபடுவதனை தடை செய்யுமாறு தடையீட்டு எழுத்தாணை கோரி அகில இலங்கை இந்து மகா சபையினால் யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் 10,000 தொடக்கம் 15,000 வரையிலான மக்கள் கூடும் சமய விழாவில் 300 தொடக்கம் 500 வரையிலான கோழிகள், ஆடுகளை வெட்டி இறைச்சியாக்கி ஆலயத்தினுள் விற்பளன செய்வது தண்டனைக்குரிய குற்றமென யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மன்றில் தெரிவித்துள்ளார்.

ஆலயத்தினுள் வேள்வியினை நடாத்துவதற்கு சங்கானை பிரதேசசபை, தெல்லிப்பழை பிரதேசசபை, உடுவில் பிரதேசசபை, சண்டிலிப்பாய் பிரதேசசபை, கோப்பாய் பிரதேசசபை ஆகியன அனுமதி வழங்கியுள்ளதாக மன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அனுமதி வழங்குவதற்கு இறைச்சிக்கடை சட்டத்தினை பயன்படுத்தியுள்ளமை கேவலமான விடயமெனத் தெரிவித்த நீதிபதி இறைச்சிக்கடைச் சட்டம், மிருகவதைச் சட்டம், அரசியல் சட்டம் ஆகிய சட்டங்களின்படி ஆலயங்களில் மக்கள் கூடும் பொது இடங்களில் மிருகங்களை பலியிடல் குற்றச்செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு