அவசர கூட்டத்திற்கு மருத்துவ சபை அழைப்பு

இலங்கை மருத்துவ சபையின் அவசரக் கூட்டம் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, நாளை பகல் 1.00 மணிக்கு வைத்திய சபையின் உறுப்பினர்களுக்கு குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தம்மால் சமர்ப்பிக்கப்பட்ட, இலங்கை வைத்திய கல்விக்கான குறைந்த பட்ச தகுதி தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே, இலங்கை மருத்துவ சபை, நாளைய அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள அதேவேளை, நேற்றைய சந்திப்பின் போது, மருத்துவ சபையால் முன்வைக்கப்பட்ட, மருத்துவக் கல்விக்கான குறைந்தபட்ச தகுதி தொடர்பில் திருத்தங்களை மேற்கொண்டு, அதனை வர்த்தமானியில் பிரசுரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு