மட்டக்களப்பு, கல்குடா தொகுதியிலுள்ள உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, வாழைச்சேனையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று (24) நடைபெற்றது.
வாழைச்சேனை பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கிராமமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வாழைச்சேனை, கைலாயப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதேச செயலகத்தில் முடிவடைந்ததுடன், அங்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை, உதவித் திட்டமிடல் பணிப்பாளரிடம் பேரணியில் கலந்து கொண்டோர் கையளித்துள்ளனர்.