ஒற்றையாட்சி முறைமையே தொடர வேண்டும் – சட்டத்தரணிகள் சங்கம்

அரசியலமைப்பின் இரண்டாம் அத்தியாயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இலங்கையில் ஒற்றை ஆட்சி முறைமை தொடர வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று கலந்துரையாடலொன்றை நடத்திய பின்னர் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த கேள்வித்தாள் ஒன்றில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சமஷ்டி முறைமையொன்றுக்கு செல்லும் யோசனையுடன் தாம் உடன்படவில்லையென சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உதய ரொஹான் டி சில்வா கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு