மோசடியாளர்கள் பாதுகாக்கப்படமாட்டார்கள் – மஹிந்த அமரவீர

ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களை பாதுகாக்க ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாதென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சூரியவெவ பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், கடந்த அரசாங்கத்தைப் போன்று தற்போதைய அரசாங்கத்தின் ஊழல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் கையூட்டல் ஒழிப்பு விசாரணப் பிரிவில் தாம்தான் முதலில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி தொடர்பான தகவல்கள் உரிய முறையில் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு