ஊடகங்களின் தமிழ் மொழியை புரிய முடியவில்லை – வடக்கு முதலமைச்சர்

ஊடகங்களில் தற்போது பேசப்படுகின்ற தமிழ் மொழியை எவ்வாறு வர்ணிப்பதென்று புரியவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னர் ஊடகங்களில் பேசப்படுகின்ற தமிழ் இலக்கியநடை நிறைந்ததாக முறையான உச்சரிப்புடன் கூடியதாக அமைந்திருந்தாக இன்று இடம்பெற்ற கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 2015இல் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு லகர, ளகர, ழகர மற்றும் னகர, நகர, ணகர வேறுபாடுகள் தெரிவதில்லை. ஆரம்ப வகுப்புக்களிலேயே பாடங்களை முறையாக எழுத்துக் கூட்டி வாசிப்பதால் எழுத்துப் பிழைகளற்ற சொல் வடிவங்களில் பரீட்சயப்பட முடிவதாகவும், புதிய புதிய விடயங்களை தேடிப் படிப்பதுடன், நல்ல நூல்களை பெற்று வாசிப்புப் பழக்கத்தை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு