விமலின் கருத்துத் தொடர்பில் நடவடிக்கை

நாடாளுமன்றத்துக்கு குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டிய தேவையுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வெளியிட்ட அறிவிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கருத்தானது, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், மக்கள் பிரதிநிதிகளின் உயிருக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும், எனவே, இதுகுறித்து, முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், ஏனைய தரப்பினராலும் சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு ஆரம்பித்தவுடன், குறித்த அறிவிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு