இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு

நடுக்கடலில் இராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்த, இலங்கை கடற்படையினர், வலைகளை அறுத்து வீசி, அவர்களை விரட்டியடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் அவ்வப்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இதற்கு அமைவாக, இதுவரை 55 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளதுடன், 130 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், நேற்று முன்தினம் காலை இராமேஸ்வரத்தில் இருந்து 300க்கும் குறைவான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று, மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களைத் தடுத்து விரட்டியடித்தனர். மீனவர்களை தாக்கியதோடு பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகளை அறுத்து கடலில் வீசியதாகவும் இந்தியாவின் தினகரன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு