மகாநாயக்கர்களை சந்திக்க கூட்டமைப்பு முயற்சி

புதிய அரசியலமைப்பு திருத்தம் குறித்து மகாநாயக்கர்களுடன் கலந்துரையாட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, கூடிய விரைவில் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த, கூட்டமைப்பின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் நேற்றைய கலந்துரையாடலின் போது தீர்மானித்துள்ளனர்.

மகாநாயக்கர்கள் கூறிய கருத்துத் தொடர்பில் அரசாங்கத்தின் பல தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருவதாக, இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ளவே கூட்டமைப்பு மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு