முறையற்ற சம்பள அதிகரிப்புக்கு எதிராக போராட்டம் வெடிக்கும்

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களுக்கு, அதிகரித்துள்ள சம்பள அதிகரிப்பு சட்டவிரோதமானது. அந்தச் சம்பள அதிகரிப்புக்கு, அமைச்சரவை அங்கிகாரம் அளிக்கும் பட்டசத்தில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோமென மின்சார சபை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2014.11.27 திகதி மேற்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்பு விடயத்துக்கு திறைசேறி மற்றும் அமைச்சரவை அனுமதியளிக்காத நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தின் போது இதற்கு அனுமதி வழங்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோமென அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மோசடிகளால் 400 இலட்சம் ரூபாய் மாதாந்தம் விரயமாவதாகவும், இதற்கமைய கடந்த 36 மாதங்களில் 1,500 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலத், அமைச்சரவை அனுமதியின்றி இலங்கை மின்சார சபை பொறியியல் சேவையாளர்களின் சம்பள அதிகரிப்புச் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி முதல் 50 அரை நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தாம் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு