ரஞ்சன் ராமநாயக்க உயர் நீதிமன்றில் ஆஜர்

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளுக்கு பதிலளிக்கவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரஞ்சன், இந்த நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழல்வாதிகளென குறிப்பிட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியமையானது, மக்களுக்கு சட்டம் தொடர்பில் இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதனால், நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, குறித்த மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், இன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கடந்த 12ஆம் திகதி, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு