கேரளக் கஞ்சாவுடன் மாணவர்கள் கைது

திருகோணமலை, உப்புவெளி பகுதியில் அநுராதபுரச் சந்தியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் சிலர் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விளையாட்டு மைதானத்தில் மறைந்திருந்த போது மாணவர்கள் மூவரிடம் இருந்து 1800 மில்லிக்கிராம் கேரளா கஞ்சா உப்புவெளி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அன்புவெளிபுரம் 3ம் கட்டை மற்றும் மகமாயபுர மட்கோ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மாணவர்கள் இருவர் மற்றும் காந்திநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு