ஜனாதிபதியாக தமிழரை நியமிப்பதில் பிரச்சினையில்லை

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவது தொடர்பில் எதுவித பிரச்சினையும் இல்லையென மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இந்த நாட்டை யார் வேண்டுமானாலும் பொறுப்பேற்கலாம். ஆனால் நாட்டை பிரிக்க முடியாது. சிறுபான்மையினராக இருந்தாலும் வாக்குப் பலத்தால் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ பதவியேற்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் தமது அதிகாரங்களை கைவிட்டு தமிழ் தலைவர் ஒருவருக்கு முழு அதிகாரத்தையும் வழங்குங்கள். அதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. இந்த நாட்டில் தமிழ் தலைவர் ஒருவரோ அல்லது முஸ்லிம் தலைவர் ஒருவரோ நியமிக்கப்படுவதற்கு தாங்கள் எதிர்ப்பல்ல என்றும், ஆனால் தமக்கிருக்கின்ற பிரச்சினை இந்த நாட்டை பிராந்தியங்களாக பிரித்து நாசமாக்குவது தொடர்பிலேயே என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் சுதந்திர போராட்டத்தின் போது சிங்கள மக்கள் மாத்திரம் அல்லாது ஏனைய சமூகத்தினரும் சேர்ந்தே பாடுபட்டார்கள். அதேபோல் இந்த நாட்டில் சிங்களம் அல்லாத காரணத்தால் எவராவது ஒரு நபருக்கு சிங்களவர்கள் அனுபவிக்கும் எந்தவொரு வரப்பிரசாங்களாவது கிடைக்காதிருந்தால் அதனை அவர்களுக்கு வழங்க தாங்கள் தயார் என்றும் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு