இளஞ்செழியன் புத்தபெருமான் அளவுக்கு முக்தியடைந்தவர்

இந்து ஆலயங்களில் மிருக பலி இடுவதற்கு தடை விதித்து தீர்ப்பளித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், புத்த பெருமான் அளவுக்கு முக்தியடைந்தவரென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட இந்துக் கோவில்களில் வேள்வி பூசைகளின் போதும், ஏனைய எந்த பூசைகளின் போதும் மிருகங்களை பலியிடுவதற்கு முற்றாக தடை விதித்து நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இளஞ்செழியனின் இந்த தீர்ப்பை ஏனைய நீதிபதிகளும் முன்னுதாரணமாக எடுக்க வேண்டும் என்பதுடன், அரசியல்வாதிகளும் இதுபோன்ற நல்ல விடயங்களை கண்டால் அதனை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, முன்னதாக மேர்வின் சில்வா முன்னேஸ்வரம் கோவிலில் இடம்பெறுகின்ற மிருக பலி பூசைக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு