இந்தியாவிலிருந்து இறக்குமதியான அரிசியை விநியோகிக்க நடவடிக்கை

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை அரிசியை நாடு முழுவதுமுள்ள லங்கா சதொச விற்பனை நிலையத்திற்கு விநியோக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஒரு இலட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியில், 10,000 மெற்றிக் தொன் அரசி இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளதுடன், இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசியை லங்கா சதொச ஊடாக நுகர்வோர் 74 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியுமென சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை கிராம மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை விற்பனை செய்வதற்கான விஷேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக சதொச தலைவர் டி.எம்.கே.பி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு