ட்ரம்பிற்கு எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அவரது கட்சியான குடியரசு கட்சியிலேயே எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாக சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடுகள் தொடர்பில் குடியரசு கட்சியின் செனட் சபை உறுப்பினர் பொப் கோர்கெர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், தற்போது குடியரசு கட்சியின் அரிசோனா மாநில செனட் உறுப்பினர் ஜெஃப் ஃப்ளேக்கும் டொனால்ட் ட்ரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமையின் செயற்பாடுகளும் நடத்தையும் அபாயகரமானது என்றும், ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், தாம் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு