அதிகாரப் பகிர்வு தொடர்பில் தவறான பரப்புரை

அதிகாரப் பகிர்தல் என்பது, மாகாணங்களைப் பிரிந்து செல்ல வழிசமைக்கும் என்று அர்த்தமாகாதென கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் தற்போது நிலவும் கருத்தாடல் குறித்து நேற்று தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன், மாகாணங்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்படுவதால், நாடு பிரிந்து செல்லும் அபாயமுள்ளது என்று சிலர், மக்களைக் குழப்பமடையச் செய்யும் பொய்யான கருத்துகளைப் பரப்பி வருவதாகவும், இது முற்றிலும் தவறான புரிதல் என்றும் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கான அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் சட்டம், நாட்டின் மேன்மைமிகு இறைமையாக கருதப்படும் அரசமைப்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் நாட்டின் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு விடயத்தை இவர்கள் எதிர்க்கின்றார்கள் என்றால், இவர்கள் இந்த நாட்டின் உயர்ந்த சட்டத்தை அவமதிக்கின்றார்கள் என்றே அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்குள் அனைத்து இனங்களும் சமமமாக, சகல உரிமைகளையும் வளங்களையும் சமமாக அனுபவிக்கும் விதமான தீர்வொன்று வழங்கப்பட வேண்டுமானால், அவற்றுக்கெல்லாம் அச்சாணியாக அதிகாரப் பகிர்தல் அவசியமம் என்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு