அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு எதிராக பிரார்த்தனை

அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு எதிராக தேசாபிமான பிக்குகள் முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் தலதா மாளிகை வளாகத்தில் வேண்டுதலில் ஈடுபட்டன.

இதன்பின்னர் கருத்த வெளியிட்ட தேசபிமான பிக்குகள் முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக தேரர், புதிய அரசியலமைப்பை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவரப்படுவதை தவிர்க்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை பிரிப்பதைப் பற்றி பேசுகின்ற போதிலும், அவர்கள் இந்த நாட்டை ஆதரிப்பவர்களாக இருப்பார்களாயின், கொண்டுவரப்படவுள்ள அரசியலமைப்புக்கு எதிராக வாக்களிக்குமாறு அவர்களிடம் தாம் கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கூட்டணியும் இதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும், புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு கிராம பகுதிகளுக்கு வர வேண்டாம் என்றும் பெங்கமுவே நாலக தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு