சொந்த நாடுகளுக்குச் செல்லும் ஐ.எஸ் ஆதரவாளர்கள்

கடந்த 02 வருடகாலப் பகுதியில் சிரியா மற்றும் ஈராக் உட்பட பல நாடுகளில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் தமது சொந்த நாடுகளுக்கு சென்றுள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான புள்ளிவிபர அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

33 நாடுகளில் தங்கியிருந்த குறைந்தது 5,600 பேர் நாடு திரும்பியுள்ளதாக அந்த அமைப்பினால் இன்று விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உருவான காலம் முதல் 100 நாடுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் குறிப்பாக சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் யுத்தமுனைகளில் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு