அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை

எந்தவொரு அதிகாரப் பிரிவினராலும் நிறுத்த முடியாத வண்ணம், நாட்டினுள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளரால் மங்கள சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், புதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற, எதிரணியினரின் கருத்து மிகவும் அச்சுறுத்தலான ஒன்று எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலையான சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்காக புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென 2015ஆம் ஆண்டு மக்கள் ஆணை கிடைக்கப் பெற்ற வேளை குறிப்பிடப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இரு பிரதான தலைவர்களும் நாடு, உலகின் நம்பிக்கையை வென்று, சர்வதேச அளவில் முன்னோக்கிச் செல்வதை பொறுத்துக்கொள்ள முடியாது, தோல்வியைத் தழுவிய குழுவினர் இதுபோன்ற கருத்துக்களை கூறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விமல் வீரவங்ச பாராளுமன்றம் குறித்து வெளியிட்ட கருத்து மிதவாத அரசியலையே வெளிப்படுத்துகின்ற போதிலும், பெரும்பாலான மனிதநேயம் மிக்க மக்கள் படையுடன், கரம் கோர்த்து மிதவாத படையினரை தோற்கடிக்க தயார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு