காற்றாலைக்கு ஆசிய வங்கி கடனுதவி

இலங்கையில் முதலாவது காற்றாலையை அமைப்பதற்கான கடன் உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கவுள்ளது.

இதற்காக 200 மில்லியன் டொலர்கள் கடனாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதியளித்துள்ளதாகவும், இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ள இந்த கடன்தொகையைக் கொண்டு, 100 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான காற்றாலை ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வேலைத்திட்டத்துக்கு மொத்தமாக 256.7 மில்லியன் டொலர்கள் முதலீடு தேவை என்ற நிலையில், எஞ்சிய 56.7 மில்லியன் டொலர்களை இலங்கை மின்சார சபை பங்களிப்பு செய்யும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு