மானுஸ்தீவில் அகதிகள் துன்புறுத்தப்படுகின்றனர்

மானுஸ்தீவின் அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் கடற்கடந்த விசாரணை கொள்கையின் அடிப்படையில், இலங்கை அகதிகள் உள்ளிட்ட 700க்கும் அதிகமானவர்கள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பப்புவா நியுகினி நாட்டின் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவின் அடிப்படையில், இந்த மாதம் 31ஆம் திகதியுடன் குறித்த முகாம் மூடப்படவுள்ள நிலையில், முகாமை மூடுவதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, அங்குள்ள அகதிகள் துன்புறுத்தல்களுக்கும், கொள்ளையடிப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். இது தொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கம் விரைவான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு