சிறுவர்களின் எதிர்காலத்தை கருதி செயற்பட வேண்டும் – கட்டாரில் ஜனாதிபதி

சிறுவர்களின் எதிர்கால நன்மையின் பொருட்டு செயற்பட வேண்டியது அனைவரினதும் பொறுப்பென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்டாரின் டோஹா நகரிலுள்ள ஸ்டெப்பர்ட் பாடசாலைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடும் போது இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இலங்கை சிறுவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களின் எதிர்காலம் பொருட்டு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும், மாணவ சமூகங்களிடையே பல்வேறு கனவுகள் உள்ளன. அவற்றை நனவாக்க அனைவரும் பாடுபடவேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

கட்டாருக்கான இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று டோஹா இஸ்லாமிக் மத்திய நிலையத்திற்கும் விஜயம் மேற்கொண்டனர். இந்த இஸ்லாமிய மத்திய நிலையமானது பண்டைய உலோகங்கள், நகைகள், பீங்கான்கள், மரம், கண்ணாடி, துணி மற்றும் நாணயங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு