புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் அகதி விண்ணப்பங்கள் நிராகரிப்பு?

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் அகதி விண்ணப்பத்தை நிராகரித்து, அவர்களை இலங்கைக்கு நாடுகடத்த முடியுமென ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நீதிபதிகள் ஆலோசனைக் குழுவின் சட்டத்தரணி ஒருவர், இந்த ஆலோசனையை வழங்கி இருப்பதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து கோரியிருந்த இலங்கையர் ஒருவர் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக தொடுத்திருந்த வழக்கின் நிமித்தம், இந்த ஆலோசனை கோரப்பட்டிருந்தமைக்கு அமைவாக, இலங்கையில் துன்புறுத்தல்கள், மருத்துவ நிராகரிப்புகள், உயிராபத்து என்பன தொடர்வதாக கூறப்பட்டாலும், விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களது அகதி அந்தஸ்த்து கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லையென குறித்த சட்டத்தரணி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த ஆலோசனையின் அடிப்படையிலேயே குறித்த இலங்கை அகதிகளுக்கான தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு