யாழில் மலேரியா நுளம்புகள் அதிகரிப்பு

யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கத்துக்கு மத்தியில், மலேரியா காய்ச்சலுக்கான அனோபிளிஸ் ஸ்ரெ பன்சி என்னும் நுளம்பும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மக்களுடைய விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் டெங்கு மற்றும் நுளம்பு காய்ச்சல்களை பரப்பும் நுளம்புகளை கட்டுப்படுத்தவே இயலாதென யாழ். ஊடக அமையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ள அதேவேளை, யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதாகவும், குறிப்பாக யாழ். மாவட்டத்தில் 02 மரணங்களும் சம்பவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு