வடக்கில் வரட்சியால் விவசாயம் பாதிப்பு

கிளிநொச்சி உள்ளிட்ட வடபிராந்தியத்தில் கடந்த காலங்களில் வரட்சி காரணமாக பெரும்போக மற்றும் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

மாவட்டத்தில் 60,000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில், மழை வீழ்ச்சி கிடைக்காததன் காரணமாக இரணைமடுக்குளம், அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், குடமுருட்டிக்குளம், புதுமுறிப்புக்குளம், கல்மடுக்குளம், கரியாலை நாகபடுவான்குளம் உட்பட அனைத்து குளங்களுக்குமான நீர் வரவு இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மழைக் காலத்தில் குளங்களின் நீர் மட்டம் பத்தடியினை தாண்டியிருக்கும். ஆனால் குளங்களுக்கான நீர் வரவு இடம்பெறக் கூடிய வகையில் மழை வீழ்ச்சி கிடைக்கவில்லை எனவும், மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளும் புழுதி விதைப்பின் மூலம் விதைப்பினை நிறைவு செய்துள்ள நிலையில் மழை வீழ்ச்சி இடம்பெறாததன் காரணமாக பயிர்கள் காய்ந்து போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல வயல்களில் விதைக்கப்பட்ட நெல்லுக்கு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறாததன் காரணமாக பயிர் முளைக்காத நிலைமை உள்ளதாகவும், கூடுதலான விலையில் விதை நெல்லினைப் பெற்று விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நெருக்கடி நிலைமையில் உள்ளனர். குறிப்பாக பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவில் 12,000 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மானாவாரி நெற்செய்கை அழிவடைந்துக் கொண்டிருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மழை வீழ்ச்சி இடம்பெறாவிட்டால் மாவட்டத்தில் காலபோக நெற்செய்கை பெரும் அழிவுகளை எதிர்நோக்கும் எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு