ஜனாதிபதியின் வருகைக்கு இலங்கையர்கள் மகிழ்ச்சி (Photos)

கட்டாருக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஜயம் குறித்து கட்டாரிலுள்ள இலங்கையர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கட்டாருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு வசிக்கும் இலங்கையர்களை நேற்று டோஹா நகரில் சந்தித்து பேசியபோது, எந்த சவால் ஏற்பட்டாலும் சுபீட்சமான சிறந்த நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

இணையத்தளங்கள் ஊடாக வெளிக்காட்டப்படும் இலங்கையைவிட மாறுபட்ட சூழல் நாட்டில் காணப்படுவதாகவும், சில இணையத்தளங்கள் தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும், நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை தொடர்ந்து சில இணையத்தள ஊடகங்கள் வாயிலாக பிழையான பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்பம் மனிதனின் நல்ல விடயங்களுக்காக உருவாக்கப்பட்ட போதிலும், அதனை தவறான வழியில் பயன்படுத்தும் சிலர் அதன் ஊடாக நாட்டின் உண்மையான சுயரூபத்தை சிதைப்பதற்கு முயற்சித்து வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதுடன், தற்போதை அரசாங்கம் இலங்கையினுள் சிறப்பான அரசியல் சூழல் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், நல்லாட்சியின் கீழ் சமூகம், பொருளாதார மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு