முல்லைத்தீவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்

முல்லைத்தீவில் 02 பொதுமக்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் எனும் வீதத்தில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், முல்லைத்தீவில் கஞ்சா கடத்தல் மற்றும் திருட்டு போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக வடமாகாண சபையின் 108அவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்ற போது அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் 60,000 இராணுவம் நிலைகொண்டுள்ளதாகவும், இது முல்லைத்தீவின் மொத்த சனத்தொகையில் 02 பொதுமகனுக்கு ஒரு இராணுவச் சிப்பாய் எனும் வீதத்தில் படையினர் நிலைகொண்டுள்ளதுடன், இதேபோல் பொலிஸாரும் நிலை கொண்டுள்ளதாகவும், இந்நிலையில், கஞ்சா கடத்தல், திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும், குறிப்பாக புதுக்குடியிருப்பு பகுதியில் அண்மைக்காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகம் பதிவாகின்றதனால், மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு