நேற்று முதல் புதிய ஆள் அடையாள அட்டை

ஆட்பதிவு திணைக்களம் 45 வருடங்களின் பின்னர் புதிய அடையாள அட்டையை அறிமுகம் செய்துள்ளது.

நேற்றைய தினத்திலிருந்து புதிய ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்படுவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இது ஸ்மார்ட் காட் என்று அழைக்கப்படுவதுடன், ஒவ்வொருவரினதும் உடல் சார்ந்த தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளதாகவும், ஏற்கனவே அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் இந்த அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள தேசிய அடையாள அட்டை நல்ல நிலைமையில் இருந்தால், அவர்கள் புதிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு