சமய பாடத்திற்கு ஆசிரியர்களை இணைக்க நடவடிக்கை

சமயப் பாடங்களைக் கற்பிப்பதற்கு புதிதாக 2,643 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சமயம் சார்ந்த பாடநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களையும் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களையும் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சைவ சமயம், கத்தோலிக்கம், இஸ்லாம், பௌத்தம் உள்ளிட்ட பாடங்களைக் கற்பிற்கும் ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான அங்கீகாரம் அரசாங்க சேவை ஆணைக்குழுவிடம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நியமனங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு