உற்பத்தி அதிகரிப்பால் மீன்களின் விலையில் வீழ்ச்சி

நாட்டில் மீன் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

சந்தையில் ஜீலா, நெத்தலி போன்ற சில வகை மீன்களின் விலையில் வீழ்ச்சியேற்பட்டிருப்பதாகவும், சில மீன் வகைகளின் விலை கிலோ 100 ரூபா அளவில் குறைந்திருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில், கடற்றொழில் அமைச்சு மற்றும் பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலைய மீன் வியாபாரிகள் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமைக்கு இணங்க, மீன் விலையை நிலையாகப் பேணும் விதமாக கொப்பரா மற்றும் தலபத் போன்ற மீன் வகைகள் தவிர்ந்த ஏனைய மீன் வகைகளின் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துமாறும், ரின் மீன் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துமாறும் கடற்றொழில் அமைச்சினால், பொருளாதார அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு