ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு; 6ஆம் திகதி விசாரணை ஆரம்பம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை மீதான விசாரணை எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த விசாரணைகள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6, 7 மற்றும் 17ஆம் திகதிகளில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 07 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு