நாடாளுமன்றம் குண்டுத் தாக்;குதலுக்குள்ளாக வேண்டும் – ஜயந்த சமரவீர

அரசியலமைப்பு மறுசீரமைப்பு யோசனைகள் நாடாளுமன்றத்தினால் அனுமதிக்கப்படும் பட்சத்தில், நாடாளுமன்றம் குண்டு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

சகல அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு கையளிக்கப்படும் பட்சத்தில் நாடாளுமன்றம் அவசியம் இல்லை எனவும், நாடாளுமன்றம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு யோசனையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அனுமதிக்குமானால், நாடாளுமன்றமோ அல்லது அமைச்சரவையோ அவசியம் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

நாடு இரண்டாக பிளவுபடுவதனை தடுப்பதற்கு தேசிய சுதந்திர முன்னணியினர் தமது உயிரையும் பணயம் வைக்கத் தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு