ஈ.பி.டி.பி. குடும்பம் வாழ்ந்த வீடொன்றில் சடலங்களும், ஆயுதங்களும் மீட்பு? – தீவகத்தில் பரபரப்பு

ஊர்காவற்துறை பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவரது குடும்பம் வாழ்ந்து வந்த வீடொன்றில் இறந்த மனித சடலங்களும் ஆயுதங்களும் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த வீட்டை சோதனையிட்டபோது வெறும் தகரப் பெட்டி ஒன்று மட்டுமே அங்கிருந்து மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறை கரம்பொன் மேற்கு பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவரது குடும்பம் நீண்டகாலமாக வழ்ந்துவந்த வீட்டை நேற்று திடீரென பொலிஸார் சுற்றிவளைத்து அவ்வீட்டின் அறை ஒன்றை இயந்திரங்கள் கொண்டு தோண்டி தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விட்டில் 13 சடலங்களும் 53 ரி-56 ரக துப்பாக்கிகள் இருப்பதாக இனந்தெரியாதவர்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து, அவ்வீட்டை பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பெரும் எடுப்பில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தேடுதலின்போது அந்த வீட்டிலிருந்து வெறும் தகர பெட்டி ஒன்று மட்டுமே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸாரின் இந்த தேடுதலால் குறித்த வீடு பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

எந்தவொரு தடயங்களும் சிக்காத நிலையில் குறித்த வீட்டை சோதனையிட்ட பொலிஸ் தரப்பினர் சேதங்களுக்குள்ளான வீட்டை தாமே சீரமைத்துத் தருவதாக தெரிவித்துள்ளதுடன், அந்த வீட்டை உடனடியாகவே சீரமைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு