ஆசிரியர்களின் இடமாற்றத்தைக் கண்டித்து பொத்துவிலில் போராட்டம்

அம்பாறை, பொத்துவில் உப கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய 39 ஆசிரியர்களை இடமாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொத்துவில் பெரிய பள்ளிவாசலுக்கு அருகிலிருந்து வலயக் கல்வி அலுவலகம் வரை எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், சமூக நலன் விரும்பிகளென பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 21 பாடசாலைகளுக்கு மாணவர்கள் நேற்று சமூகமளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

இடமாற்றம் தொடர்பில் பொத்துவில் உப வலயக்கல்விப் பணிப்பாளர் என்.அப்துல் வஹாப் கருத்துத் தெரிவிக்கும் போது, தமது அனுமதியின்றி அக்கரைப்பற்று முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளரான ஏ.எல்.எம்.காசிம் என்பவரால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள போதிலும், இடமாற்றம் மேற்கொள்வதற்கான காலப்பகுதிக்குள் அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளராக செயற்பட்ட ஏ.எல்.எம்.காசிம் மூதூர் வலயத்திற்கு இடம்மாறிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டதனால், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு