வவுனியாவில் இளைஞர் மர்ம மரணம் (Photos)

வவுனியாவில் நேற்றுப் பிற்பகல் கிணற்றிலிருந்து மர்மமான முறையில் இறந்த இளைஞன் ஒருவரின் சடலத்தினை பொலிசார் மீட்டுள்ளனர்.

வவுனியா உக்கிளாங்குளம், பிள்ளையார் கோவில் வீதியில் வசித்து வந்த தியாகலிங்கம் ரகுவரன் (26 வயது) என்ற இளைஞன் கடந்த மூன்று தினங்களாக காணாமற்போயுள்ளதாகவும் இது குறித்து நேற்று முன்தினம் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் வீட்டு கிணற்றிலிருந்து குறித்த இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அந்த இளைஞன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு