மக்களிடம் கொண்டு சென்ற பின்னரே அரசமைப்பு சட்டம் சமர்ப்பிக்கப்படும்

மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பின்னரே புதிய அரசியல் அமைப்பு திருத்த சட்டம் சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற சிவில் அமைப்புக்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளதுடன், புதிய அரசியலமைப்பு திருத்தச் சட்ட நடவடிக்கைகளின் போது தாமும் நடுநிலையாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 30ஆம், 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் குறித்த அரசியலமைப்பு சட்டம் குறித்து இடம்பெறவுள்ள நாடாளுமன்ற விவாதத்தினை தொடர்ந்து, பொது மக்கள் மீண்டும் கருத்துக்களை அல்லது விமர்சனங்களை முன்வைக்க முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு