கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதை தற்காலிகமான இடைநிறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச்செல்வது வேகமாக அதிகரித்து வருவதனால், பாற்பண்ணைக் கைத்தொழில்துறைக்கும் விவசாயத் தேவைகளுக்கும் பாரியதாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், கால்நடைகளை ஏற்றிச்செல்வது தொடர்பில் முறையான நிகழ்ச்சித் திட்டமொன்றைத் தயாரிக்கும்வரை அதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கால்நடைகளை ஏற்றிச்செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் பிரதேச செயலாளர்களின் ஊடாக தற்போது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.