ஜனவரியில் தேர்தலை நடத்த முடியுமென நம்புகிறேன் – மஹிந்த தேசப்பிரிய

ஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியுமெனத் தாம் நம்பிக்கை கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், மிகவும் தாமதமடைந்ததன் காரணமாகவே, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்து அதிக அக்கறை காட்டப்படுவதாகவும், விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதன் பின்னர் அது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

நீதியானதும், சுதந்திரமானதுமாக தேர்தலை நடத்தி, மக்கள் கருத்தை உரிய முறையில் வெளிப்படுத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு